பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் பல்வேறு நாடுகளை படையெடுத்து தனது ஆட்சியை விரிவுபடுத்தினார்.
இதனிடையே, நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் உள்பட பல்வேறு கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த நெப்போலியனின் வைர நகைகள் இன்று கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் இன்று வழக்கம்போல சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொருட்களை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த கொள்ளையர்கள், நெப்போலியனின் 9 வைர நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.