கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று (அக்.20) சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி 7வது முறையாக எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.