இந்திய அணியில் நிறைய அரைகுறை பவுலர்கள்.. முன்னாள் வீரர் சாடல்!

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் இத்தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் மூலம் சுப்மன் கில் புதிய கேப்டனாக அறிமுகமானார். இதனால் இத்தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த சூழலில், முதல் போட்டியிலேயே இந்திய அணி படுதோல்வி அடைந்து பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த நிலையில், சுப்மன் கில்லின் கேப்டன்ஷி ஏமாற்றத்தை தந்ததாகவும், இந்திய அணியில் அரைகுறை பவுலர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றும் முன்னாள் வீரர் முகமது கைஃப் குற்றம் சாட்டி உள்ளார். 

Add Zee News as a Preferred Source

முகமது கைஃப் ஏமாற்றம்

இது தொடர்பாக பேசிய அவர், தற்போது விளையாடும் இந்திய அணியில் நிறைய பகுதி நேர பந்து வீச்சாளர்கள்தான் உள்ளார்கள். நிதிஷ் குமார் ரெட்டி ஒரு முழுமையான பந்து வீச்சாளர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஹர்ஷித் ராணா மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்தார். இந்த ஆடுகளத்தில் ஆட்டத்தை மாற்றும் வல்லமை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தும் யார் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

பும்ரா, ஷமி விளையாடும்போதுதான் இந்தியா வெற்றி பெறுமா? மற்ற நேரங்களில் வெற்றியை எதிர்பார்க்கக்கூடாதா? குல்தீப் யாதவ் போன்ற விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர்களை சேர்க்கவில்லை. ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் வார்னே போன்ற பந்து வீச்சாளர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். 

இந்த சூழலில், குல்தீப் யாதவ் போன்ற ஒரு பந்து வீச்சாளரை அணியில் சேர்க்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் குஹான்மென் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். நாம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு எண்ணிக்கைக்கு முன்னுரிமை தருகிறோம். இவ்வாறு முகமது கைஃப் கூறினார். 

அடுத்த போட்டி 

இந்திய அணி இத்தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால், அடுத்த இருக்கின்ற இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி அடிலெய்ட்டில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியை இந்தியா வென்றால், மூன்றாவது போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இல்லையென்றால் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றிவிடும். 

ஒருநாள் தொடருக்கான அணி

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல். 

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.  

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.