சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடல், அரபிக்கடல் என இரு கடல்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழைவரை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 25ந்தேதி […]
