இடுக்கி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியின்படி, கேரளாவின் இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இந்த 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதேபோன்று, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 24-ந்தேதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால், இடுக்கி மாவட்டத்தில் நாளை அங்கன்வாடி, நர்சரி, பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்தும்படி, இடுக்கி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
பாலக்காடு மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கல்லூரிகள் மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு, உறைவிட பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.