இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை அடுத்து சொந்த மண்ணில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் நவம்பர் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது. இத்தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா ஏ அணியும் இந்தியா ஏ அணியும் 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டிகள் இம்மாதம் 30 மற்றும் நவம்பர் 06ஆம் தேதிகளில் பெங்கரூவில் நடைபெறுகிறது.
Add Zee News as a Preferred Source
இந்தியா ஏ அணி அறிவிப்பு
இந்த நிலையில், இத்தொடருக்காக இந்திய ஏ அணி அறிவிக்கப்ப்ட்டிருக்கிறது. இந்த அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பாட்ட நிலையில், அவர் கழட்டிவிடப்பட்டிருக்கிறார். இந்திய ஏ அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதிலும் வாய்ப்பில்லை
முகமது ஷமி கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடினார். அவரது அபார பந்து வீச்சின் மூலம் இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றார். அத்தொடர் முடிந்த பின்னர், அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் காரணமாக சில தொடர்களை தவர விட்ட அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்று முக்கிய பங்காற்றினார். அதனால் பழையபடி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபிட்டாக இல்லை என கூறி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிகளில் கழட்டிவிடப்பட்டார்.
அஜித் அகர்கருடன் மோதல்
வாய்ப்புகளுக்காக தொடர்ந்து காத்திருந்த முகமது ஷமிக்கு இடம் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்தார். இதனால் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரை நோக்கி கேள்விகளை எழுப்பினார். ரஞ்சு கோப்பையில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா? என கேட்டார். பின்னர் இது தொடர்பாக பேசிய அகர்கர், முகமது ஷமி ஃபிட்டாக இருந்திருந்தால், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருப்பார் என்று கூறினார்.
முடிவுக்கு வரும் கேரியர்
இந்த சூழலில், ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடிய ஷமி, 7 விக்கெட்கள் மற்றும் 11 மெய்டன்கள் வீசி தன்னை நிருபித்தார். இதன் காரணமாக அவருக்கு தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய ஏ அணியிலும் தற்போது அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தேர்வு குழுவை எதிர்த்து பேசியதால்தான் அவருக்கு இந்திய அணியில் கூட இடம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ‘ஏ’ அணி
முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மத்ரே, என் ஜகதீசன், சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் கஹ்மத், குர்ன்ஷூர் அகமது, குர்ன்ஷூர் அகமது, ஆயுஷ் படோனி, சரண்ஷ் ஜெயின்.
2வது நான்கு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அஹ்மத், குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
About the Author
R Balaji