Ind vs Aus: கே.எல். ராகுலை விஷயத்தில் செய்த தவறு.. அது மீண்டும் நடந்தால்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்கத்திலிருந்தே கடுமையான தடுமாற்றத்தை சந்தித்தது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால் இந்திய அணியின் ரன்கள் சேர்க்கை மந்தமானது.  

Add Zee News as a Preferred Source

இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர  விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேற, அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் மிதமான ஆட்டத்திலேயே முகாமை முடித்தார். இந்நிலையில், ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 38 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துத் தாக்கத்துடன் விளையாடி அணியை தாங்கினார்.  

ஆனால், அக்சர் ஐந்தாவது இடத்தில் களமிறங்கியது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அனுபவமும் திறனுமுள்ள கே.எல். ராகுலை அந்த இடத்தில் இறக்காமல் ஆறாம் இடத்தில் அனுப்பியது சரியான முடிவு அல்ல என்கிறார்கள். ஆறாம் இடத்தில் வந்த ராகுல் 31 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடியிருந்தாலும், அவரை உயர்ந்த இடத்தில் களமிறங்குவதால் அணிக்கு அதிக பயன் கிடைக்கும் என நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  

ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டர் வீரராக விளையாடி பழகியுள்ள ராகுல், நடுப்பகுதியில் வரும்போது பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்புகள் குறைகின்றன. இதனால், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது பிற மேல்தட்டு பேட்ஸ்மேன்களுடன் இணைந்து ராகுல் விளையாடுவது அணிக்கு உறுதியான ஸ்கோர் அமைக்க உதவும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.  

மேலும், பின் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால், அணி சமநிலை பாதிக்காமல் ராகுலை ஐந்தாவது இடத்தில் களமிறக்குவது சிறந்ததெனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் பரிந்துரைக்கின்றன.  

Kl Rahul, india vs australia, ind vs aus, india batting order, gautam gambhir, cricket, latest news in tamil, ind vs aus 2nd odi, shubman gill, கே.எல். ராகுல், இந்தியா ஆஸ்திரேலியா, இந்தியா ஆஸ்திரேலியா, கவுதம் கம்பீர், கிரிக்கெட், அண்மைச் செய்திகள், சுப்மன் கில், இந்திய பேட்டிங் வரிசை 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.