டாடா சியரா எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிய வேண்டியவை.! | Automobile Tamilan

டாடா மோட்டாரின் அடுத்த மிகப்பெரிய அறிமுகம் என்னவென்றால் சியரா.EV மற்றும் சியரா ICE என இரண்டிலும் வரவுள்ள நிலையில், இதற்கான அறிமுக பணிகள் மற்றும் உற்பத்தியை துவங்குவதற்கு டாடா திட்டமிட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களில் முழுமையான விவரங்கள் வெளியாக உள்ள நிலையில், தற்பொழுது வரை கிடைத்த தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

New Tata Sierra SUV

சியரா எஸ்யூவி வடிவமைப்பில் மிகவும் நவீனத்துவமான எதிர்கால டிசைனில் போகவில்லை. மாறாக, பல இடங்களில் பழைய ஸ்கூல் டிசைன் மற்றும் நவீன அம்சங்கள் கலந்து ஒரு அழகான சமநிலை அமைத்திருக்கிறது.

குறிப்பாக வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களில், இந்த கார் மிகவும் அழகாகத் தோன்றும்! பின்னிலை பகுதி சிறிது குறைவாக (chopped off) வடிவமைக்கப்பட்டிருக்கிறது இது பூட் ஸ்பேஸ் மற்றும் இன்டீரியர் ஸ்பேஸ் அதிகரிக்க உதவுகிறது.

முந்தைய சியராவில் இருந்தபோல் பின்பக்க பம்பர் வெளியே நீட்டிக்கப்படவில்லை. ஆனாலும், மொத்தமாகப் பார்த்தால் இந்த புதிய வடிவமைப்பு அழகாகத் தோன்றுகிறது.

சியராவின் பிரபலமான பின்புற ஜன்னல் வளைவு (signature rear window curve) இந்த முறை புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டு, அதன் பழைய அடையாளத்தை தக்கவைத்திருக்கிறது.

இன்டீரியரை பொறுத்தவரை பழைய மாடலை போல அல்ல நவீன தலைமுறை வாகனங்களை போல மிக அகலமான மூன்று ஸ்கீரின் செட்டப் கொடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் வெளியாகியது.

சியராவில் பல்வேறு நவீன கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், டிஜிட்டல் சார்ந்த மேம்பாடுகள் என அனைத்திலும் பன்மடங்கு வசதிகளை பெற்றதாக விளங்க உள்ளதை தெளிவாக பார்க்க முடிகின்றது.

tata sierra suv sidetata sierra suv side

Tata Sierra ICE

சியரா என்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் என மொத்தமாக மூன்று ஆப்ஷனை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் 168bhp மற்றும் 280Nm டார்க்கை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரியர் மற்றும் சஃபாரியில் உள்ள 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல், 168bhp மற்றும் 350Nm டார்க்கை வழங்கும்.

இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் புதிதாக வரவுள்ள NA என்ஜின் பற்றி பவர் விபரம் தற்பொழுது கிடைக்கவில்லை.

Tata Sierra EV

சியரா காரில் முதலில் எலக்ட்ரிக் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் ஹாரியர்.இவி காரில் உள்ளதை போன்ற பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

65Kwh பேட்டரியின் ரேஞ்ச் தொடர்பான ARAI-ன் கூற்றுப்படி 538 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. C75 சதவீதத்தினர் அடைய முடியும் என்று நிறுவனம் கூறும் பிராண்டின் C75 எண்ணிக்கை 420-445 கிமீ ஆகும். ஆனால் பவர் 238hp வரை வெளிப்படுத்தும்.

டாப் 75Kwh வேரியண்டின் 234bhp பவரை பின்புற வீல் டிரைவ் மாடல் வெளிப்படுத்தும் நிலையில் ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு முன்புற வீல் 138hp வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த டார்க் 504NM வெளிப்படுத்தும்.

RWD 75kWh மற்றும் AWD 75kWh வகைகள் MIDC-சான்றளிக்கப்பட்ட 627km மற்றும் 622km வரை சிங்கிள் சார்ஜில் பயணிக்க முடியும். C75 என அழைக்கப்படும் டாடாவின் உண்மையான ரேஞ்ச் சோதனை மூலம் RWD 75kWh ஆனது 480-505km வழங்கலாம்.

டாடா சியரா விலை எவ்வளவு ?

ரூ.15 முதல் ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் டாடா சியரா எஸ்யூவி எதிர்பார்க்கப்படும் நிலையில் அறிமுகம் நவம்பர் மத்தியில் அல்லது டிசம்பர் துவக்கத்தில் வெளியிடப்படலாம்.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.