புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே மாவட்​டம், புரந்​தர் பகு​தி​யில் வெங்​கா​யம் பயி​ரிட்டு வருபவர் சுதம் இங்​லே. இவர் இந்த பரு​வத்​தில் தனது வெங்​காயப் பயிருக்கு சுமார் ரூ.66,000 செல​விட்​டிருந்​தார். ஆனால் இடை​வி​டாத மழை​யால் இப்​பயி​ரின் பெரும் பகுதி சேதம் அடைந்​தது. ஒரு பகு​தியை மட்​டுமே அவரால் காப்​பாற்ற முடிந்​தது.

எஞ்​சிய வெங்​கா​யத்தை சுதம் இங்லே கடந்த வெள்​ளிக்​கிழமை விற்​பனைக்​காக புரந்​தர் சந்​தைக்கு கொண்டு வந்​தார். அங்கு 7.5 குவிண்​டால் வெங்​கா​யத்​துக்கு அவருக்கு ரூ.1,729 மட்​டுமே கிடைத்​தது. இதில் போக்​கு​வரத்​து, சுமை கூலி, எடை போடு​தல் உள்​ளிட்ட செல​வு​கள் ரூ.1,065 போக அவருக்கு ரூ.664 மட்​டுமே மிஞ்​சி​ய​தால் அவர் அதிர்ச்சி அடைந்​தார்.

உரமாக்க முடிவு: இதுகுறித்து சுதம் இங்லே கூறுகை​யில், “இது 1 ஏக்​கர் நிலத்​தில் விளைந்​தது. இன்​னும் ஒன்​றரை ஏக்​கர் நிலத்​தில் வெங்​கா​யம் உள்​ளது. ஆனால் நான் அதை விற்க மாட்​டேன். மாறாக வயலிலேயே அதை அழித்து அடுத்த ஆண்​டுக்கு உரமாக மாற்​று​வேன். இது விற்​பதை விட லாபகர​மானது. அரசு தலை​யிட​வில்லை என்​றால், விவ​சா​யிகள் தற்​கொலைகள் அதி​கரிக்​கும்” என்​றார்.

ஆசி​யா​வின் மிகப்​பெரிய வெங்​காய சந்​தை​யான லாசல்​கான் ஏபிஎம்​சி.​யில், விலை குவிண்​டாலுக்கு ரூ.500 முதல் ரூ.1,400 வரை உள்​ளது. கடந்த வாரம் தீபாவளிக்கு சந்தை மூடப்​படு​வதற்கு முன் ரூ.1,050 (1 கிலோ ரூ.10.50) என்ற அளவில் இருந்​தது.

இதுகுறித்து ஏபிஎம்சி உறுப்​பினர் ஒரு​வர் கூறுகை​யில், “இந்த ஆண்டு கோடை​யில் (மார்ச்​-ஏப்​ரல்) வெங்​காய விளைச்​சல் அபரிமித​மான இருந்​தது. அப்​போது அதிக விலை கிடைக்​காத விவ​சா​யிகள் அவற்றை இருப்பு வைத்து தற்​போது விற்​கின்​றனர். தற்​போது நாசிக் மாவட்​டத்​தில் 80% வெங்​காய பயிர்​கள் சேதம் அடைந்​து​விட்​டன. எஞ்​சி​யவை தரம் குறைந்​த​தாக உள்​ளன. எனவே அவற்​றுக்​கு விலை கிடைக்​க​வில்​லை” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.