ChatGPT Atlas: ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம்

சான் பிரான்சிஸ்கோ: ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ என்ற ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருக்கு நேரடி சவாலாக விளங்கும் என டெக் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டை வாரத்துக்கு சுமார் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேலும் சில அம்சங்கள் மூலம் பயனர்களை தங்கள் வசம் ஈர்க்கும் வகையில் இந்த பிரவுசரை ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளதாக தகவல்.

கூகுள் நிறுவனம் கீவேர்டு சார்ந்த தேடுதல்களை தகவல்களாக பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் பயனர்கள் உரையாடல் சார்ந்த ஏஐ சாட்-பாட்களை தற்போது அணுகி வரும் நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் அட்லஸ் பிரவுசரின் வரவு அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்போது இந்த அட்லஸ் பிரவுசர் உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் அட்லஸ் பிரவுசரை விரைவில் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சவாலை சமாளிக்கும் வகையில் கூகுள் நிறுவனமும் சாட்ஜிபிடி அறிமுகமான பின்னர் பயனர்களுக்கு தங்களது தேடுபொறியில் ஏஐ மோடினை வழங்கி வருகிறது. இதோடு வழக்கமான சேர்ச் ரிசல்ட்களையும் கூகுள் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அட்லஸ் பிரவுசர் அறிமுகத்துக்கு பிறகு குரோம் பிரவுசரை தன்வசம் கொண்டுள்ள ஆல்பாபெட் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் புதன்கிழமை மதியம் சுமார் 1.8 சதவீதம் என சரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.