இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் வெறும் எட்டு பந்துகள் சந்தித்த அவர், ரன்கள் எதுவும் சேர்க்காமலே டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாவது போட்டியில் அவர் ரன்களை குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உயர்ந்தது.
Add Zee News as a Preferred Source
ஆனால் அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்திலும் கோலி நான்கு பந்துகள் சந்தித்ததுமே மீண்டும் டக் அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இரு ஆட்டங்களில் டக் அவுட்டாகும் சம்பவம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே முதல் முறை ஆகும். கோலி அதிகப்படியான ஆட்டங்களில் ஐந்தாவது ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்துகளை ஆட வேண்டும் என்ற ஆர்வத்தால் ஆட்டமிழந்ததாக நிபுணர்கள் பகுப்பாய்வு செய்கின்றனர். இதனையடுத்து அவரது பேட்டிங் நிலை குறித்தும், எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.
ஓய்வு விவாதம் மீண்டும் சூடுபிடிப்பு
ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, தற்போதைய ஒருநாள் தொடரிலும் ரன்கள் சேர்க்கத் தவறி வருவதால் அவரது முழுமையான ஓய்வு குறித்து ஊகங்கள் மீண்டும் கிளம்பியுள்ளன. சில முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஓய்வை யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கூறி வருகின்றனர்.
ரிதம் மற்றும் டச்சை இழந்துவிட்டார்
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப், கோலியின் சரிவுக்கு காரணம் அவரது நீண்ட இடைவெளி என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “ஒரு வீரர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடும்போதுதான் அவரின் ரிதம் மற்றும் டச் நிலைத்திருக்கும். ரிதத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்தை கணித்தவுடனே சரியான பதில் அளிப்பார். ஆனால் விராட் கோலி கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடாமல், நேரடியாக ஒருநாள் தொடரில் மட்டும் களம் இறங்கியுள்ளார். இதனால் அவரது டச் மற்றும் ரிதம் இரண்டும் அமைதியாக இல்லை. அதுவே அவர் அடிக்கும் நேரத்தை பாதிக்கிறது” என்று முகமது கைப் விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும், “கோலி மீண்டும் தொடர்ச்சியாக ஆடத் தொடங்கினால் அவரின் பேட்டிங் தானாகவே வந்துவிடும். இப்போது அவருக்கு தேவையானது விளையாட்டு தொடர்ச்சியும், நம்பிக்கையும் தான்,” என கூறினார்.
ரசிகர்கள் அதிர்ச்சி, ஆதரவு வெளிப்பாடு
விராட் கோலியின் இரட்டைக் டக் ஆட்டங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அதேசமயம், பலரும் அவரை மீண்டும் பூரண ரிதத்தில் மைதானத்திற்கு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
About the Author
R Balaji