சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்அளவை எட்டும் நிலையில் உள்ளதால், ஏரிக்கு வரும் உபரி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையடுத்து அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி […]