Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 65% பேர் பெங்களூரு, டெல்லி – என்.சி.ஆர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய பெரு நகரகங்களைச் சேர்ந்த, 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

Scam
Scam

இந்த மோசடியால் ஒட்டுமொத்தமாக ரூ.1500 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறுவதன்படி கால்பங்கு (26.38%) பாதிப்பு பெங்களூரில் ஏற்பட்டுள்ளது.

Investment Scam

இந்த நகரங்களில் சந்தேகப்படாத முதலீட்டாளர்கள் அதிகமாக இருப்பதனால் முதலீடு மோசடிகளுக்கு சரியான முகாம்களாக அமைந்துள்ளன. மோசடிக்காரர்களால் குறிவைக்கப்படும் நபர்களின் வயதைக் கொண்டு (76% 30-60 வயதினர்), நன்றாக சம்பாதிக்கும் சூழலில், இன்னும் அதிகம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்களைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

60 வயதுக்கு மேலானவர்கள் அடுத்தபடியாக அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். 8.62% பேர் அதாவது, 2,829 மூத்த குடிமக்களிடமும் இந்த மோசடியை நடத்தியிருகின்றனர்.

இது ஏன் ஒரு சாதாரண மோசடி இல்லை என்றால் இந்தியா டுடே தளம் கூறுவதன்படி, சராசரியாக ஒரு நபரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள பணம் 51.38 லட்சம்!

Scam

இந்த அதிநவீன மோசடி முதலீட்டு திட்டங்களால் ஒரு நபரின் ஒட்டுமொத்த நிதி பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதை இது குறிக்கிறது.

எப்படி நடக்கிறது?

இந்த மோசடியை செய்ய குற்றவாளிகள் பல்வேறு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதாக எச்சரித்துள்ளனர். மெஸ்ஸேஜ் ஆப்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஒட்டுமொத்த வழக்குகளில் 20% டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெஸ்ஸேஜிங் ஆப் வழியாக நடந்துள்ளன. இதில் இருக்கும் தனிப்பட்ட மெஸ்ஸேஜ் அனுப்பும் ரகசியத்தன்மையும், குழுக்கள் உருவாக்கும் வசதியும் மோசடிக்காரர்களுக்கு ஏதுவானதாக அமைந்துள்ளது.

லின்க்ட்-இன், ட்விட்டர் போன்ற அதிகாரப்பூர்வ முறையான ஆப்கள் 0.31 மோசடிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. முறையற்ற, சமூக வலைத்தளங்களில் மோசடிக்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 41.87 விழுக்காடு மோசடிகள் நடந்த தளங்கள் ‘others’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது பலதரப்பட்ட வழிகளில் இன்னும் கண்டறியப்படாத முறைகளில் மோசடிகள் நடந்துள்ளதை இது குறிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.