ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த வெற்றியை காட்டிலும், போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் இரண்டு மாபெரும் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை பேச்சு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை கனக்க செய்துள்ளது.
Add Zee News as a Preferred Source
A clinical bowling and fielding effort
A magnificent partnership between 2️ greats
Moments to cherish from #TeamIndia’s 9️-wicket victory in Sydney!
Updates https://t.co/omEdJjQOBf#AUSvIND | #3rdODI pic.twitter.com/uK7BJJeAUT
— BCCI (@BCCI) October 25, 2025
வெற்றியுடன் முடிந்த பயணம்
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களின் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா சதம் அடித்தும், விராட் கோலி அரை சதம் அடித்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி தொடரை இழந்த இந்திய அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
விராட் கோலியின் உருக்கமான பேச்சு
போட்டி முடிந்த பிறகு, வர்ணனையாளர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருடன் பேசிய இருவரும், ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே தங்களது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்பதை சூசகமாக தெரிவித்தனர். முதலில் பேசிய விராட் கோலி, “நாங்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். இந்த நாட்டிற்கு வந்து, இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் விளையாடுவதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். எங்களின் சில சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் இங்குதான் விளையாடியுள்ளோம். எங்களை இவ்வளவு அன்புடன் வரவேற்றதற்கு மிக்க நன்றி. நீங்கள் அற்புதமானவர்கள்; இங்கு எங்களுக்கு ஆதரவு குறைந்ததாக நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நினைவுகளை பகிர்ந்த ரோஹித் சர்மா
கோலியின் கருத்தை ஆமோதித்த ரோஹித் சர்மா, தனது பயணத்தின் தொடக்கத்தை நினைவு கூர்ந்தார். “ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். 2008ல் (CB Series) நான் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய இனிமையான நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாக இருக்கிறது. அதே போன்ற ஒரு வெற்றியுடன், அதே போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான இணைப்புடன் இங்கு எனது பயணத்தை முடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவோமா என்று தெரியவில்லை, ஆனால் இத்தனை ஆண்டுகளில் இங்கு விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி ஆஸ்திரேலியா!” என்று உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.
About the Author
RK Spark