பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மதநாயக்கன ஹள்ளி – ஹூஸ்கூர் சாலையில் ஐ.டி. பெண் ஊழியர் பிரியங்கா(வயது 26), தனது சகோதரனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சாலையில் இருந்த குழியை தவிர்ப்பதற்காக அவரது சகோதரர் பைக்கை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் ஹெல்மெட் அணிந்திருந்த சகோதரர் உயிர் தப்பிய நிலையில், ஹெல்மெட் அணியாத பிரியங்கா பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை பள்ளத்தை தவிர்க்க முயன்றதால் பெண் ஐ.டி. ஊழியர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.