தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளார். நாளை அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையட்டி, திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் […]