“மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' – கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம் ஆன பெண்கள் அணியும் தங்க நகைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதியாக ஒரு விதியை அவர்கள் வகுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் செலவினங்களையும் ஆடம்பர கலாச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இதனை முன்னெடுத்து இருக்கின்றனர்.

கிராமத்தின் சார்பாக சமூக கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Gold

கனமான ஆடம்பர நகைகளை அணிவதால் அல்லது காட்சிப்படுத்துவதால் ஏழை குடும்பங்கள் மீது ஒரு விதமான நிதி சுமை ஏற்படுவதாகவும், இதனை குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிராமத்தின் சுய கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த முடிவின் படி, திருமணம் ஆன பெண்கள் மூன்று குறிப்பிட்ட தக்க தங்க நகைகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகிறார்கள். மூக்குத்தி (‘ஃபூலி’), காதணிகள் (‘பண்டே’) மற்றும் மாங்கல்யம் (‘மங்கல்சூத்ரா’) ஆகியவை ஆகும்.

தங்கத்தின் விலை உயர்வால் ஏழை குடும்பங்கள் தொடர்ச்சியாக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், பெரும்பாலான குடும்பங்கள் கடனில் தத்தளிப்பதை தவிர்க்கவும், அவர்களின் சேமிப்பை அதிகப்படுத்தவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.