சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுபோல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் […]