India vs Australia, Virat Kohli Celebration: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக். 25) நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 0-2 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், மூன்றாவது போட்டி சம்பிரதாயமாக நடைபெறுகிறது.
Add Zee News as a Preferred Source
India vs Australia: இந்திய அணியில் பெரிய மாற்றம்
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் மிட்செல் மார்ஷ் இன்று பிளேயிங் லெவனில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார். கடந்த போட்டியில் விராட் கோலி உள்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சேவியர் பார்ட்லட் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் நேதன் எல்லிஸ் விளையாடினார். இந்திய அணியை பொருத்தவரை நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
India vs Australia: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 56, மிட்செல் மார்ஷ் 41 ரன்களை அடித்தனர். இந்திய அணி பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 4, வாஷிங்டன் சுந்தர் 2, சிராஜ், பிரசித் கிருஷ்ணா,குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். வெறும் 237 ரன்கள் இலக்கை இந்திய அணி தற்போது துரத்தி வருகிறது.
India vs Australia: விராட் கோலி, ரோஹித் கேட்ச்கள்
இந்திய அணி இப்போட்டியை எளிமையாக சேஸ் என செய்யும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இதுவே கடைசி போட்டியாக இருக்கும் என்பதால் இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பீல்டிங்கிலேயே இருவரும் தலா 2 கேட்ச்களை பிடித்து அசத்தினர். விராட் கோலி பீல்டிங் செய்யும் போது பார்வையாளர்கள் மத்தியில் எழும் கூச்சல் சத்தம் விண்ணை முட்டியது.
What a special catch that is from Virat Kohli
Follow #AUSvIND: https://t.co/YH5IbBTdsc pic.twitter.com/EcAya9tviT
— cricket.com.au (@cricketcomau) October 25, 2025
India vs Australia: கில் ஆட்டமிழப்பு
இந்தச் சூழலில், இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சர்மா கடந்த போட்டியில் இருந்த ஃபார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். ஹசில்வுட்டை கவனமாக விளையாடிய ரோஹித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவுண்டரிகளாக பறக்கவிட்டார். மறுமுனையில் கில்லும் ஒரு சில பவுண்டரிகளை அடித்த நிலையில், 26 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Virat Kohli: விராட் கோலியின் மிரட்டலான என்ட்ரி
கேப்டன் கில் பெவிலியன் திரும்பியதும் விராட் கோலி களமிறங்கினார். அவர் பேட்டுடன் களத்திற்குள் செல்லும்போது ஒட்டுமொத்த மைதானமுமே ஆரவார ஒலி எழுப்பி அசத்தியது. இந்தியாவில் நடைபெறும் போட்டியை போல் விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது சரி, பீல்டிங்கின்போது சரி வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli Celebration: விராட் கோலியின் அந்த 1 ரன்…
இந்த தொடரில் முதலிரண்டு போட்டிகளிலுமே டக்அவுட்டான விராட் கோலி இன்றைக்கு ரன் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. விராட் கோலி முதல் பந்திலேயே ஹசில்வுட்டை எதிர்கொண்டார். அந்த முதல் பந்திலேயே மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார்.
Virat Kohli was very happy to get off the mark and the SCG crowd was just as pumpe #AUSvIND pic.twitter.com/WvpNDmt8lo
— cricket.com.au (@cricketcomau) October 25, 2025
அந்த முதல் ரன்னை அடித்ததும் விராட் கோலியின் முகத்தில் அவ்வளவு சிரிப்பும் பொலிவும் தோன்றியது. முதல் ரன்னை அடித்துவிட்டேன், மீண்டும் டக்அவுட்டாகவில்லை என விராட் கோலி முஷ்டியை முறுக்கினார். அதேபோல் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஆரவார ஒலி எழுப்பி தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். சமூக வலைதளங்களிலும் விராட் கோலியின் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது.
India vs Australia: தற்போதைய நிலவரம்
தற்போது இந்திய அணி பேட்டிங்கில் 28 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா 78, விராட் கோலி 52 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 132 பந்துகளுக்கு 66 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
மேலும் படிக்க | IND vs SA: சுப்மன் கில் இல்லை! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?
மேலும் படிக்க | விராட் கோலிக்கு இது கடைசி போட்டி… சிட்னியில் இதுவரை அவர் அடித்த ரன்கள் எவ்வளவு?
மேலும் படிக்க | கபடியில் கில்லி! தங்கம் வென்ற கார்த்திகா… யார் இந்த கண்ணகி நகர் ‘பைசன்’?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More