சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் அட்டவணையை கணக்கிட்டு, அதற்கு முன்னதாக பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட இருப்பதாகவும், இதுதொடர்பாக நவம்பர் 4ந்தேதி அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் , தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் […]