50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு தொடக்கம்

லண்டன்: சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது.

இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக் கதை புத்​தகத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் புக்​கர் பரிசு என்ற இலக்​கிய விருது வழங்​கப்​படு
​கிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் 8 முதல் 12 வயது சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்​கும் புக்​கர் பரிசு வழங்க புக்​கர் பரிசு அறக்​கட்​டளை முடிவு செய்​துள்​ளது. இந்த கதை புத்​தகத்தை குழந்​தைகளும் அடங்​கிய நடு​வர் குழு தேர்வு செய்​யும். இதற்கு அடுத்​தாண்டு முதல் விண்​ணப்​பிக்​கலாம்.

தேர்வு செய்​யப்​படும் சிறு​வர் கதை புத்​தகத்​துக்கு 2027-ம் ஆண்​டிலிருந்து புக்​கர் பரிசு வழங்​கப்​படும். இந்​தப் புத்​தகம் இங்​கிலாந்து அல்​லது அயர்​லாந்​தில் ஆங்​கிலத்​தில் அல்​லது ஆங்​கிலத்​தில் மொழிபெயர்க்​கப்​பட்டு வெளி​யிடப்பட வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.