தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்​னாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க உளவு அமைப்​பான சிஐஏ-​வின் முன்​னாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் அரசுடனான அமெரிக்​கா​வின் உறவு மிக​வும் சிறப்​பாக உள்ளது. குறிப்​பாக அந்த நாட்​டின் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரப் ஆட்​சிக் காலத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவு மிக​வும் வலு​வாக இருந்​தது.

சர்​வா​தி​காரி​களு​டன் இணைந்து பணி​யாற்​று​வதை அமெரிக்கா விரும்​பு​கிறது. பொது​வாக சர்​வா​தி​காரி​கள் மக்​களின் கருத்​துகள், ஊடகங்​களின் செய்​தி​கள் குறித்து துளி​யும் கவலைப்​படு​வது கிடை​யாது. அந்த வகை​யில் பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் முஷாரபுடன் அமெரிக்கா நெருங்கி பணி​யாற்​றியது.

பொருளா​தார வளர்ச்​சி, தீவிர​வாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு கோடிக்​கணக்​கான ரூபாயை வாரி​ இறைத்​தோம். இந்த பெரும் தொகை மூலம் முஷாரபை விலைக்கு வாங்​கினோம். அவர் ஆட்​சி​யில் இருந்​த​போது ஒரு வாரத்​தில் பலமுறை சிஐஏ அதி​காரி​கள் சந்​தித்​துப் பேசுவது வழக்​கம். அமெரிக்கா என்ன சொன்​னாலும் அதை முஷாரப் அப்​படியே செயல்​படுத்​து​வார்.

பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு தேவை​யான வசதி​களை செய்து கொடுத்து அவர்​களை முஷாரப் மகிழ்ச்​சி​யாக வைத்திருந்தார். தீவிர​வாதத்​துக்கு எதி​ரான போரில் அமெரிக்கா​வுடன் இணைந்து பணி​யாற்​று​வ​தாக அவர் நடித்து வந்​தார். உண்​மை​யில் அவர், இந்​தி​யா​வில் தீவிர​வாத தாக்​குதல்​களை நடத்​து​வ​தில் தீவிர​மாக இருந்​தார்.

அல்- காய்தா தீவிர​வா​தி​களை அழிக்​கவே பாகிஸ்​தானுக்கு தாராள​மாக நிதி​யுதவி வழங்​கினோம். ஆனால் பாகிஸ்​தான் ராணுவம் அல்-காய்​தாவை அழிப்​ப​தில் கவனம் செலுத்​த​வில்​லை. இந்​தி​யா​வில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படு​வது குறித்து மட்​டுமே முஷாரபும் பாகிஸ்​தான் ராணுவ​மும் தீவிர கவனம் செலுத்​தின.

ஊழல் வழக்​கு​களில் சிக்​கிய பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் பெனாசீர் புட்டோ கடந்த 2000-ம் ஆண்​டில் சொந்த நாட்டை விட்டு வெளி​யேறி துபா​யில் வசித்​தார். அங்கு அவர் மிக​வும் ஆடம்​பர​மாக வாழ்ந்​தார். ஆனால் பாகிஸ்​தான் மக்​கள் மிகுந்த ஏழ்​மை​யில் வாடினர். இது​தான் பாகிஸ்​தானின் உண்மை முகம் ஆகும். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.