`நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்'- பிரதீப்பின் பழைய ட்வீட்டுக்கு`டியூட்' தயாரிப்பு நிறுவனத்தின் பதில்

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. `லவ் டுடே’, `டிராகன்’ படங்களைத் தொடர்ந்து இப்படமும் 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் கணக்கில், Random thoughts #NightTym #CrucialDays #CinemaDreams, வாழ்க்கை எனக்காக என்ன வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை?” எனவொரு பதிவிட்டிருந்தார்.

Dude - டியூட்
Dude – டியூட்

`டியூட்’ படமும் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் இந்தச் சூழலில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனின் அந்தப் பழைய ட்வீட்டை ரீட்வீட் செய்து ஒரு பதிவிட்டிருக்கிறது.

அந்த ட்வீட்டில், “இந்த ட்வீட்டை உங்கள் சினிமா கனவுகளைக் கொண்டாடப் பதிவிடுகிறோம்.

உங்களுக்குத் தெரிந்ததுதான், 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்களும் எங்கள் தயாரிப்புப் பயணத்தைத் தொடங்கினோம்.

உங்களைப் போன்ற பல அற்புதமான திறமைகளுடனான ஒத்துழைப்புகளால் இந்தப் பயணம் சிறப்பாக அமைந்தது பிரதீப்!

உங்களுக்கு மேலும் உயரங்கள், பெரிய வெற்றிகள் மற்றும் இன்னும் பல விஷயங்கள் நிகழ வாழ்த்துகிறோம். ஒன்றாக இணைந்து, நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்! எனப் பதிவிட்டிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.