Attagasam: “ஏமாற்றமளிக்கிறது; தல விரும்பிகளின் நலம் விரும்பியாக நான்…" – இயக்குநர் சரண்

இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `அட்டகாசம்’.

அஜித், பூஜா, ரமேஷ் கண்ணா எனப் பலரும் இணைந்து நடித்திருந்த இத்திரைப்படம் 2004-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி பெரும் கொண்டாட்டமாக அமைந்திருந்தது.

Attagasam Re Release
Attagasam Re Release

`அட்டகாசம்’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி வருகிற அக்டோபர் 31-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

ரீ-ரிலீஸையொட்டி படத்திற்கு புதிய டிரெய்லர் ஒன்றை கட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த டிரெய்லரை இயக்குநர் சரணும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த டிரெய்லர் தன்னை ஏமாற்றமளிப்பதாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “தயாரிப்பாளர்களே! இந்த டிரெய்லர் எனக்கு ஏமாற்றமளிக்கிறது.

என்னிடம் இந்தப் பணியை ஒப்படைத்திருந்தால் தல விரும்பிகளின் நலவிரும்பியாக செயல்பட்டு டிரெய்லரை சூடேற்றியிருப்பேன்.

ஃபேன் மேட் டிரெய்லர்களே எத்தனை தரமாக இருக்கின்றன? Anyway All the best” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து வெளியான படத்தின் புதிய டிரெய்லரை யூட்யூபிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.