சென்னை: மொந்தா புயல் உருவாகி உள்ளதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே அடை மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மொந்தா புயலாக வலுப்பெற்றது. […]