நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து: ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்

லக்னோ: டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர்.

ஆக்ரா – லக்னோ தேசிய எக்​ஸ்​பிரஸ் நெடுஞ்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே நேற்று அதி​காலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்​தது. உடனடி​யாக பேருந்தை நிறுத்​திய ஓட்​டுநர், பயணி​கள் அனை​வரை​யும் எழுப்பி அவசர அவசர​மாக வெளி​யேற்​றி​னார்.

அதற்​குள் பேருந்து முழு​வதும் தீப்​பற்றி மளமளவென எரிந்​தது. அதிர்​ஷ்ட​வச​மாக 70 பயணி​களும் உயிர்த்​தப்​பினர். யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை. இந்த சம்​பவம் ரேவ்ரி சுங்​கச்​சாவடிக்கு முன்பு 500 மீட்​டர் தூரத்​துக்​குள் நடந்​துள்​ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘தகவல் அறிந்து தீயணைப்​புத் துறை​யினர் விரைந்து வந்து தீயை அணைத்​தனர். பேருந்து ஓட்​டுநரும் நடத்​துநரும் பயணி​களை பத்​திர​மாக வெளி​யேற்றி உள்​ளனர்’’ என்​றனர்.

போலீ​ஸார் கூறும்​போது, ‘‘பேருந்​தின் ஒரு டயரில் தீப்​பிடித்​துள்​ளது. இதை உடனே பார்த்த ஓட்​டுநர் பேருந்தை நிறுத்தி உள்​ளார் என்று முதல் கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​தது. தீயை அணைத்த பிறகு நெடுஞ்​சாலை​யில் இருந்து பேருந்து அகற்​றப்​பட்டு போக்​கு​வரத்து சரி செய்​யப்​பட்​டது’’ என்​றனர்.

ஆந்​திராவில் 2 நாட்​களுக்கு முன்​னர் சொகுசு பேருந்து தீப்​பற்றி எரிந்து 20 பயணி​கள் உயி​ரிழந்த நிலை​யில், இந்த சம்​பவம் நடை​பெற்​றது பெரும் பரபரப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.