வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும்: நயினார் நாகேந்திரன் அழைப்பு 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணியில் பாஜக தொண்​டர்​களும் ஈடுபட வேண்​டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயி​னார் நாகேந்​திரன் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு: தமிழகத்தில் வாக்காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்​கும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. எனவே, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்த பணி​யில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் எந்த வாக்​காளர் பெயரும் விடு​ப​டா​மல் பார்த்​துக் கொள்ள வேண்​டும்.

திருத்​தப் பணி​யில் ஈடு​படும் அரசு அலு​வலர்களுடன் இணைந்​து, வாக்​காளர்​கள் யார் யார் என்​பதை அடை​யாளம் காட்ட உதவ வேண்​டும். நமது ஆதரவு வாக்​காளர்களைப் நீக்க சிலர் சதி செய்​யக்​கூடும். எனவே, பாஜக தொண்​டர்​கள், பூத் கமிட்டி உறுப்​பினர்​கள் கவன​மாக​வும் விழிப்​புணர்​வுட​னும் செயல்​பட வேண்​டும். அப்​பாவி கிராம மக்​களின் வாக்​குரிமை பறிக்​கப்படாமல் தொண்​டர்​கள் உதவ வேண்​டும். வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர்​கள் நீக்​கப்​பட்​டால் அதற்​கான காரணத்தை கேட்க வேண்​டும். அரசு அலு​வலர்​கள் வாக் காளர் பட்​டியலை சரி​பார்க்​கும்​போது பாஜகவினர் விழிப்​புடன் செயல்பட வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.