வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய் | Automobile Tamilan

ஹூண்டாய் இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வெனியூ எஸ்யூவி பல்வேறு நவீன டெக் சார்ந்த அம்சங்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குடன், 6 ஏர்பேக்குகள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன ADAS Level 2 பெற்றதாக வரவுள்ளது.

குறிப்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகின்ற பெரும்பாலான கார்களில் அடிப்படை சார்ந்த பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியதை கடந்து வாடிக்கையாளர்களும் இன்றைக்கு பட்ஜெட் விலை என்பதனை கடந்த பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு ஹூண்டாய் வெனியூ காரில் கொடுத்துள்ள பாதுகாப்பு அம்சங்களின் பட்டியல் பின் வருமாறு;-

  • ஆறு ஏர்பேக்குகள்,
  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
  • ABS with EBD
  • ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட்
  • அனைத்து சீட் பெல்ட்களுக்கும் நினைவூட்டலுடன் கூடிய மூன்று-புள்ளி சீட் பெல்ட்கள்
  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
  • நான்கு சக்கர டிஸ்க் பிரேக்குகள் உள்ளன

குறிப்பாக அனைத்து வேரியண்டுகளிலும் 33 விதமான பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றது.

16 வகையான ஓட்டுநர் உதவி அம்சங்களுடன் ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் என அழைக்கப்படுகின்ற ADAS லெவல் 2 தொழில்நுட்பத்தை கொண்டதாக வந்துள்ள இந்த வெனியூ எஸ்யூவியில் ஸ்டாப் & கோவுடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல், அனைத்து வாகனங்கள், கார்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது மோதுவதனை தடுக்கும் உதவி, லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் ஆகியவை அடங்கும்.

மேலும் இந்த வாகனத்தின் உடல் அமைப்பு 71% உயர் தர ஸ்டீல் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறது, இதில் ஹாட் ஸ்டாம்பிங் மற்றும் அல்ட்ரா-ஹை ஸ்ட்ரெங்த் ஸ்டீல் ஆகியவை அடங்கும்.

எனவே, 2026 ஹூண்டாய் வெனியூ காரில் டாப் வேரியண்டுகளில் ஒட்டுமொத்தமாக 65க்கு மேற்பட்ட பாதுகாப்பு சார்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

venue saftey 1venue saftey 1

நவீன டெக் வசதிகள்

D-Cut ஸ்டீயிரிங் வீலை பெற்றுள்ள வெனியூ காரின் டேஸ்போர்டில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான இரட்டை 12.3-இன்ச் வளைந்த பனோரமிக் டிஸ்ப்ளே மிகவும் தெளிவான காட்சியை வழங்குவதுடன் வாடிக்கையாளர்கள் பல்வேறு நவீன அம்சங்களை பெற முடியும் என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக NVIDIA தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ccNC (Connected Car Navigation Cockpit) அமைப்பு பயன்படுத்தப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பை வழங்குகிறது, மேலும் 20 வாகனக் கட்டுப்பாடுகளுடன் OTA மேம்பாட்டினை வழங்குகிறது. இந்த காரில் 70க்கு மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களையும் ஐந்து மொழிகளில் 400க்கும் மேற்பட்ட குரல் அங்கீகார கட்டளைகளையும் ஆதரிப்பதுடன் இதனை நமது தமிழ் மொழி உட்பட ஆங்கிலம், பெங்காலி, ஹிங்லிஷ் மற்றும் இந்தி ஆகியவற்றில் பெறலாம்.

என்ஜின் ஆப்ஷன், முன்பதிவு, விலை அறிவிப்பு

2026 வெனியூ காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் என மூன்று ஆப்ஷனிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கிடைக்க உள்ள நிலையில், முதன்முறையாக டீசலிலும் ஆட்டோமேட்டிக் வழங்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.