How to watch IND VS AUS T-20: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அனல் பறந்த ஒருநாள் தொடருக்கு பிறகு, கிரிக்கெட் உலகின் கவனம் தற்போது டி20 தொடர் பக்கம் திரும்பியுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி, நாளை அக்டோபர் 29 கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்து, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா டி20 தொடரை வென்று, இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க காத்து கொண்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
BEAST MODE: ACTIVATED!
It’s SKYBALL TOUGHEST RIVALS expect nothing less than
Will register their 4th successive T20I series win against Australia?
IND vs AUS | 1st T20I WED, 29th OCT, 12.30 PM pic.twitter.com/vm19Vf3GDu
— Star Sports (@StarSportsIndia) October 28, 2025
உலக கோப்பைக்கான முன்னோட்டம்
சில மாதங்களில் 2026ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடர் இரு அணிகளுக்குமே தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை சோதித்து பார்க்க ஒரு மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை 2024 மற்றும் ஆசிய கோப்பை 2025 ஆகிய இரண்டையும் வென்று, டி20 கிரிக்கெட்டில் ஒரு வெற்றிகரமான பயணத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஆஸ்திரேலிய மண்ணில் அதன் சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த சரித்திரத்தை இந்த முறை மாற்றியமைக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்
அபிஷேக் சர்மா: செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்ற கையோடு, அபாரமான ஃபார்மில் இருக்கிறார். ஆசிய கோப்பையில் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில், 314 ரன்களை குவித்து தொடரின் அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
திலக் வர்மா: ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இவர் ஆடிய நிதானமான, ஆனால் மதிப்புமிக்க 69 ரன்கள், இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் இவரது முதிர்ச்சியை காட்டியது.
குல்தீப் யாதவ்: ஆசிய கோப்பையில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்த இந்தியாவின் துருப்புச் சீட்டு.
சூரியகுமார் யாதவ்: இந்த ஆண்டு இவரது ஃபார்ம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும், டி20 கிரிக்கெட்டில் இவரது அதிரடி ஆட்டம், எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியது.
இந்தியா vs ஆஸ்திரேலியா முழு டி20 தொடர் அட்டவணை
அக். 29 – 1வது டி20 – மனுகா ஓவல், கான்பெரா – பிற்பகல் 1:45
அக். 31 – 2வது டி20 – மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் – பிற்பகல் 1:45
நவ. 02 – 3வது டி20 – பெல்லரைவ் ஓவல், ஹோபார்ட் – பிற்பகல் 1:45
நவ. 06 – 4வது டி20 – பில் பிப்பன் ஓவல், கோல்ட் கோஸ்ட் – பிற்பகல் 1:45
நவ. 08 – 5வது டி20 – தி கப்பா, பிரிஸ்பேன் – பிற்பகல் 1:45
நேரலை ஒளிபரப்பு விவரங்கள்
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும். டாஸ் பிற்பகல் 1:15 மணிக்கு நடைபெறும். இந்தியாவில், இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாகவும், ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் கண்டு களிக்கலாம்.
அணி வீரர்கள் விவரம்
இந்திய அணி: சூரியகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மாஹ்லி பியர்ட்மேன், டிம் டேவிட், பென் ட்வார்ஷுய்ஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.
About the Author
RK Spark