பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் மிரியானா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி ஓன்றின் உரிமையாளரின் மகன் சதாம் என்கின்ற இம்ரான் (வயது 33), இவர் தனது குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர் ஒருவரின் 15 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் கல்குவாரி உரிமையாளரின் மகன் சதாம் தான் கர்ப்பத்திற்கு காரணம் என தெரிய வந்தது. பின்னர் சிறுமியின் தாய் மிரியானா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சதாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.