Abishan Jeevinth: `டூரிஸ்ட் பேமிலி' இயக்குநருக்கு திருமணம்; BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

Tourist Family Director Abishan Jeevinth
Tourist Family Director Abishan Jeevinth

இந்தப் படத்தை ̀டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தயாரித்த எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், செளந்தர்யா ரஜினிகாந்தும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இதில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் “வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?” எனக் கேட்டிருந்தார்.

அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அபிஷன் சொன்னதுபோலவே, அவருக்கு வருகிற அக்டோபர் 31-ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.

Abishan Jeevinth & Magesh Raj
Abishan Jeevinth & Magesh Raj

திருமண பரிசாக எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ், அபிஷனுக்கு பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்திருக்கிறார்.

அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது. ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.