அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில், “அஜித் சாரோட காரை எப்ப வாங்குவீங்க?” என்ற ரசிகரின் கேள்விக்குக் கலகலப்பாகப் பதிலளித்திருக்கிறார் நடிகர் ரியோ.

ரசிகரின் கேள்வி: சிவகார்த்திகேயன் சார் விஜய் சாரோட துப்பாக்கிய வாங்கிட்டார். நீங்க எப்போ அஜித் சாரோட காரை வாங்குவீங்க?
நடிகர் ரியோ: எனக்கு அந்த மாதிரி பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசையிருக்கு. அது நடக்குமானு பார்ப்போம். அதுக்கான உழைப்ப போடுவோம். அஜித் சாரோட கார் மட்டுமல்ல, அவர் யூஸ் பண்ற டுக்காட்டி பைக்கைக்கூட வாங்கி யூஸ் பண்ணணும்னு ஆசைதான். நம்புவோம் ஒரு நாள் நடக்கும்” என்று ஜாலியாகப் பதிலளித்திருக்கிறார் ரியோ.