ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், அடுத்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டின் தன்மையே அதிரடி தான் என்பதை உணர்ந்து, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு, இந்திய அணி ஒரு புதிய மற்றும் அதிரடியான ஃபார்முலாவை கையாள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது இதற்கு முன்பு பல அணிகள் முயற்சி செய்து வெற்றி பெற்ற ஒரு பார்முலா தான்.
Add Zee News as a Preferred Source
#TeamIndia training in full swing ahead of thest #AUSvIND T20I on Wednesdaypic.twitter.com/aPwl1fT90m
— BCCI (@BCCI) October 27, 2025
புதிய ஃபார்முலா என்ன?
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாளும். முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசுவது, விக்கெட்டுகள் போனாலும் ரன் ரேட்டை குறைக்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆடுவது, அணியில், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கக்கூடிய பவர்-ஹிட்டர்களை அதிகமாக வைத்திருப்பது தான் சில அணிகளின் வெற்றி ரகசியம். “விக்கெட் போவதை பற்றிக் கவலைப்படாதே, ரன் ரேட் மட்டும் குறையக்கூடாது” என்பதே டி20 போட்டிகளில் ஜாம்பவான்களாக இருக்கும் அணிகளின் தாரக மந்திரம். இந்த அதிரடி அணுகுமுறை, பல போட்டிகளில் அணிகளுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.
இந்தியா ஏன் இந்த ஃபார்முலாவைக் கையாள வேண்டும்?
ஒருநாள் தொடரில் இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறை, குறிப்பாக முதல் 10 ஓவர்களில் சற்று மந்தமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. டி20யில் அதுபோன்ற ஒரு மெத்தனமான ஆட்டம், தோல்விக்கே வழிவகுக்கும். ஆஸ்திரேலியா போன்ற ஒரு சக்திவாய்ந்த, ஆக்ரோஷமான அணிக்கு எதிராக ஒரு வழக்கமான, பாதுகாப்பான ஆட்டம் எடுபடாது. எனவே, டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் இந்த சூழலில், ஒரு புதிய, அச்சமற்ற அணுகுமுறையை சோதித்து பார்க்க, இதுவே சரியான தருணம் என்று அணி நிர்வாகம் கருதுவதாக தெரிகிறது. எதிரணியை அவர்களின் பாணியிலேயே, அதிரடியாக தாக்கி, தொடக்கத்திலிருந்தே அழுத்தத்திற்கு உள்ளாக்கினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கலாம்?
இந்த ஃபார்முலாவை செயல்படுத்துவதற்காக, இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா, முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட அறிவுறுத்தப்படலாம். நிதிஸ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் போன்ற அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ஆல்-ரவுண்டர்களுக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம். ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவார்கள். பிளேயிங் 11ல் இடம் பிடிக்க நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் சிவம் துபே இடையே போட்டி நிலவுகிறது. இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark