ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சர் மதன் திலாவர் நேற்று முன்தினம் கூறியதாவது: ராஜஸ்தானில் கல்வி, சம்ஸ்கிருத கல்வி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கீழ் வரும் அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தினமும் காலையில் தேசிய கீதமும் மாலையில் தேசிய பாடலும் பாடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு தரப்படும். வருகைப் பதிவு இல்லாதவர்கள் சம்பளக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும். ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே தேசியவாத சிந்தனையை ஊக்குவிப்பதே இந்தக் கொள்கையின் நோக்கம். இதனை செயல் படுத்துவது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியாகும்.
2026 கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சீருடை அமல்படுத்தப்படும். இதில் ஆசிரியர்களுக்கும் சீருடை அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஆசிரியர்களும் மாணவர்களும் அடையாள அட்டை எடுத்து வருவது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.