ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அக்டோபர் 29ஆம் தேதி கான்பெரா மைதானத்தில் துவங்கி உள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறிக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
Add Zee News as a Preferred Source
ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு
இப்போட்டியில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் அளிக்காமல் ஷர்ஷித் ராணாவை பிளேயிங் 11ல் கொண்டு வந்தது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. ஹர்ஷித் ராணா 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா அணி வெல்ல முக்கிய பங்கு அளித்தார். இதன் காரணமாக அவருக்கு கம்பீர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் வாய்ப்பளித்து வருகிறார்.
டி20 100 விக்கெட்களை எடுத்த அர்ஷ்தீப் சிங்
கடந்த சிட்னி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து ராணா சிறப்பாக விளையாடினார். ஆனால் மற்றபடி அவர் அணியின் வெற்றிக்கு சொல்லும்படியாக பங்காற்றியதில்லை. ஆனால், 2022-ல் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், இந்தியாவுக்காக 3 ஆண்டுகளில் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதலாவது வீரராக வரலாற்றை எழுதினார்.
2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அர்ஷ்தீப், இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றதில் கருப்பு குதிரையாக இருந்தார். அவ்வாறு சாதனை படைத்த வீரரை தொடரின் முதல் போட்டியிலேயே பெஞ்சில் அமர வைத்த இந்த முடிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கண்டனங்களை பெற்று வருகிறது.
ரசிகர்கள் விமர்சனம்
மேலும், ஆஸ்திரேலிய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க் போன்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் நிலையில், அந்த வழக்கான வாய்ப்பை கௌதம் கம்பீர் அர்ஷ்தீப்பிற்கு அளிக்காமல் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளித்து சரியல்ல என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய இடது கை பவுலர் என்ற அடித்தளத்தில் அர்ஷ்தீப் சிங் வாய்ப்புக்கு உரியவர் என அவரது ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், கௌதம் கம்பீர் அவருக்கு வாய்ப்பளிக்காமல், இச்சந்தர்ப்பத்தில் அக்கறையின்றி அர்ஷ்தீப்பை கழற்றி விட்டதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
‘இன்னும் என்ன செய்ய வேண்டும்”
இதை வைத்து ரசிகர்கள், “இந்திய அணியில் இடம் பிடிக்க ஒரு வீரர் இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்பதில் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்புகின்றனர். அதே சமயம், ஹர்ஷித் ராணா போன்ற புதுமுக வீரர்களுக்கு இவ்வளவு ஆதரவு உள்ளதோ அல்லவோ என்பது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பரிமாறப்படுகிறது. இதுவே ராணாவை நிரந்தர வீரராக உருவாக்கும் வகையில் கம்பீரின் முயற்சியாகும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
About the Author
R Balaji