Shardul Thakur Targeted 8th Spot of Team India: 2023 உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி, 2027 உலகக் கோப்பையை குறிவைத்துள்ளது. அதற்காக இப்போதில் இருந்தே தயாராகி வருகிறது. முதற்கட்டமாக ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கழற்டிவிட்டு சுப்மன் கில்லை தலைமையில் அமர வைத்துள்ளது பிசிசிஐ. இதன் காரணமாக மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அத்தொடரில் விளையாடுவார்களா? என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.
Add Zee News as a Preferred Source
8வது இடத்திற்கு முயற்சி
அதேசமயம் இந்திய அணியில் இடத்தை பிடிக்க இளம் வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தற்போது இந்திய அணிக்குள் ஹர்ஷித் ராணா நுழைந்திருக்கிறார். அவர் 8ஆம் இடத்தில் விளையாடி வருகிறது. கொஞ்சம் பேட்டிங்கும் செய்வதால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியில் 8வது இடத்தில் பிடிக்க முயற்சித்து வருவதாக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர்.
இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணியில் இடம்பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். ஒரு இடத்தில் நிலைக்க தொடர்ச்சியான அசத்தல்களான ஆட்டம் தேவை. நல்ல செயல்பாடுகள் என்னை அணியில் தேர்வு செய்ய உதவும். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருப்பதால், அங்கு 8வது இடத்தில் பவுலிங் ஆல்-ரவுண்டர் தேவைப்படலாம். அந்த இடத்தை நான் குறிவைத்துள்ளேன்.
அதற்காக நான் உழைத்து வருகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட நான் தயாராகவே இருக்கிறேன். ஒருவேளை நாளை அழைப்பு வந்தாலும் கூட, அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என கூறினார். ஷர்துல் தாக்கூர் கூறும் 8வது இடத்திற்கு நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். எனவே அவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அறிதே.
பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர்
முன்னதாக ஷர்துல் தாக்கூர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி விளையாடி இருக்கிறார். இதில் சில போட்டிகளில் அவர் இந்தியா வெற்றிபெற காரணமாக இருந்திருக்கிறார். குறிப்பாக 2021ஆம் ஆண்டு கபா, ஓவல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றி இருக்கிறார். அதேபோல் எதிரணியின் நீண்ட பேட்டிங் பார்ட்னர்ஷிப்பை பல முறை தகர்த்துள்ளார். ஆனால் விக்கெட்கள் எடுப்பதற்கு நிகராக ரன்களையும் இவர் வாரி வழங்குவதால் அவரை இந்திய அணி எடுக்க தயங்கி கழற்றிவிட்டது.
ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு
இந்திய அணி தற்போது ஹர்ஷித் ராணாவுக்கு 8வது இடத்தில் வாய்ப்பளித்துள்ளது. அவருக்கு ஓரளவுக்கு பேட்டிங் செய்ய வருவதால், அவரை உலகக் கோப்பையில் விளையாட வைக்க வளர்த்து வருவதாக தெரிகிறது. இப்படியான ஒரு சூழலில், ஷர்துல் தாக்கூர் தான் 8வது இடத்திற்கு முயற்சித்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமே.