செளதி அரேபியாவில் உலகின் மிக உயரமான கால்பந்து திடல் அமைக்கப்பட உள்ளது. நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் இந்தத் திடல் கட்டப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் இது உலகின் மிக உயரமான கால்பந்து திடல் என்ற பெருமையைப் பெறும்.
Add Zee News as a Preferred Source
பிரமாண்டமான திடல்
இந்தத் திடலில் சுமார் 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து கால்பந்து போட்டிகளை ரசிக்க முடியும் என கூறப்படுகிறது. இது சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியை பயன்படுத்தி இயங்கும். இது சுற்றுச்சூழல் நட்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் சாதனையாக அமையும்.
செளதி அரேபியாவின் புதிய திட்டம்
செளதி அரேபியா எண்ணெய் வளங்களுக்கு மட்டும் அல்லாமல், சுற்றுலா மற்றும் புதிய கட்டுமானங்களுக்கும் பெயர் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக நியோம் ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானம் நியோம் நகரின் ‘தி லைன்’ எனப்படும் நேரியல் ஸ்மார்ட் நகருடன் இணைக்கப்பட்டு, எதிர்கால கட்டிடக்கலை மற்றும் நிலைத்தன்மை முனைப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
பணிகள் மற்றும் இலக்குகள்
2027ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். 5 ஆண்டுகள் நடைபெறும் கட்டுமான பணிகள் 2032ஆம் ஆண்டுக்குள் இத்திடல் முழுமையாக கட்டி முடிக்கப்படும். மேலும், 2034ஆம் ஆண்டு நடைபெறும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இங்கு நடத்தும் வகையில் பணிகள் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்கு வாய்ப்பு
செளதி அரேபியாவின் ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக நியோம் ஸ்டேடியம் இருக்கும். இது சுற்றுலாப் பயணிகளையும், சுற்றுலா முதலீடுகளையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji