பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன.
இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் ஆண்கள் அணியில் இடம்பெற்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக விளையாடியிருந்தார். தங்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.

இதையடுத்து கபடியில் சாதித்த இருவருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, “கண்ணகி நகர் என்றால் எங்கும் வேலை கூட தர தயங்குவார்கள். எங்கள் கண்னகி நகரை குற்றங்கள் நடைபெறும் நகராக சித்தரித்து வைத்திருக்கிறார்கள். அந்த பிம்பத்தை உடைத்தெறிந்து என்னைப்போல பலர் சாதித்து வருகிறார்கள். எங்களுக்கு சரியாக வசதிகள் இல்லை.
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய… pic.twitter.com/nzTwkf1Aia
— Mari Selvaraj (@mari_selvaraj) October 30, 2025
அதை அரசு செய்துகொடுக்க வேண்டும். நான் கண்ணகி நகர் பெண் என்பதில் பெருமையடைகிறேன்” என்று கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா பேசியிருந்தது கவனம் ஈர்த்திருந்தது.
இந்நிலையில் கபடியை மையமாக வைத்து சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி கபடியில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை ‘பைசன்’ திரைப்படமாக எடுத்த இயக்குநர் மாரிசெல்வராஜ், கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டி ரூ.5 லட்சம் வழங்கினார். கண்ணகி நகர் மேம்பாட்டிற்கும் ரூ.5 லட்சம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டிய நடிகர் சரத்குமார், “விளையாட்டு என்றாலே எனக்கு ஒரு ஆர்வம் உண்டு. அதனாலேயே கார்த்திகாவை நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டேன்.
திறமையான விளையாட்டு வீரர்களைப் பார்த்தால் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுவேன். கபடியில் முன்னேற கார்த்திகாவிற்கு என்ன வசதிகள், உபகரணங்கள் எல்லாம் வேண்டுமோ அதற்கான உதவியைச் செய்யத் தயாராகவிருக்கிறேன். கபடி நம் நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது” என்று பேசியிருக்கிறார்.