ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு

அம்பாலா: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ரஃபேல் போர் விமானத்​தில் நேற்று பறந்​தார். இதன் மூலம் சுகோய் மற்​றும் ரஃபேல் ஆகிய இரண்டு போர் விமானங்​களி​லும் பறந்த முதல் இந்​திய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு என்ற பெயரை அவர் பெற்​றுள்​ளார்.

குடியரசுத் தலை​வர் நாட்​டின் முப்​படை தளப​தி​யாக​வும் உள்​ளார். தற்​போதைய குடியரசுத் தலை​வர் முர்​மு​ கடந்த 2023-ம் ஆண்​டில் சுகோய் போர் விமானத்​தில் பறந்​தார். இந்​நிலை​யில் அவர் நேற்று இந்​திய விமானப்​படை​யில் சேர்க்​கப்​பட்ட ரஃபேல் போர் விமானத்தில் பறக்க விருப்​பம் தெரி​வித்​தார்.

அதன்​படி ஹரி​யானா மாநிலம் அம்​பாலா விமானப்​படை தளத்​துக்கு அவர் நேற்று காலை சென்​றார். அங்கு அவர் ரஃபேல் போர் விமானத்​தில் சுமார் 30 நிமிடங்​கள் பயணம் செய்​தார். அந்த விமானத்தை குரூப் கேப்​டன் அமித் கெஹானி ஓட்​டி​னார். மணிக்கு 700 கி.மீ வேகத்​தில் 15,000 அடி உயரத்​தில் சுமார் 200 கிலோ மீட்​டர் தூரம் அந்த விமானம் சென்​றது. விமானப்​படை தளபதி ஏ.பி.சிங், மற்​றொரு ரபேல் போர் விமானத்​தில் உடன் பறந்து சென்​றார்.

இந்த அனுபவம் குறித்து அம்​பாலா விமானப்​படை மையத்​தின் பார்​வை​யாளர் புத்​தகத்​தில் திர​வுபதி கூறுகை​யில், ‘‘ரஃபேல் போர் விமானமத்​தில் பயணம் செய்​தது எனக்கு மறக்கு முடி​யாத அனுபவம். சக்​தி​வாய்ந்த ரஃபேல் விமானத்​தில் இந்த முதல் பயணம், நாட்​டின் பாது​காப்பு திறன்​கள் மீது புதிய பெருமை உணர்வை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த ஏற்​பாடு​களை செய்த இந்​திய விமானப்​படைக்​கும், அம்​பாலா விமானப்​படை தள குழு​வினருக்​கும் நன்​றி’’ என தெரி​வித்​துள்​ளார்.

சிவாங்​கி​யுடன் சந்​திப்பு: இந்​திய விமானப்​படை​யில் ரஃபேல் போர் விமானத்தை இயக்​கும் ஒரே பெண் விமானி விங் கமாண்​டர் சிவாங்கி சிங். இவரை அம்​பாலா விமானப்​படை தளத்​தில் குடியரசுத் தலை​வர் முர்மு நேற்று சந்​தித்​தார். ரஃபேல் போர் விமானத்​தில் திர​வுபதி முர்​முவை அமரச் செய்து சிவாங்கி சிங் விளக்​கம் அளித்​தார்.

ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது இந்​தி​யா​வின் ரஃபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டு, அதை இயக்​கிய சிவாங்கி சிங்கை போர் கைதி​யாக பிடிபட்​டார் என பாகிஸ்​தான் ஊடகங்​கள் செய்தி வெளி​யிட்​டன. இதை போலி செய்தி என மத்​திய அரசு தெரி​வித்​தது. தற்​போது சிவாங்கி சிங், குடியரசுத்​ தலை​வர்​ திர​வுபதி முர்​முவுடன்​ தோன்​றியது, ​பாகிஸ்​​தானின்​ பொய்​ பிரச்​​சாரத்​தை அம்​பல​மாக்​கியுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.