ஸ்ரேயாஸ் ஐயர் எப்போது மீண்டும் களத்திற்கு திரும்புவார் – முழு விவரம்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் காயம் அடைந்தார். அலெக்ஸ் கேரி அடித்த பந்தினை கேட்ச் பிடிக்க டைவ் அடித்தார். அப்போது அவரது வயிற்று பகுதி தரையில் மோதியது. இதில் அவரது விலா எலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் சாதாரன வார்டு-க்கு மாற்றப்பட்டார். 

Add Zee News as a Preferred Source

இந்த சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் நலமுடன் இருப்பதாக சமூக வலைத்தளம் மூலம் செய்தியினை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடுமையான காயம் காரணமாக அவதிபட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார் என்ற கேள்வி எழும்பி உள்ளது. தற்போது இது தொடர்பான தகவலும் வெளியாகி உள்ளது. 

அதன்படி, ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் களத்திற்கு திரும்ப தாமதமாவது, இந்திய அணிக்கு பின்னடைவே. ஸ்ரேயாஸ் ஐயர் நவம்பர் – டிசம்பர் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்து தொடரிலும் பங்கேற்பது சந்தேகத்திற்குறியதாகி இருக்கிறது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிகவும் பலமாக காணப்படும் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தில் யாரை மாற்றுவீரராக தேர்வுக்குழு தயார் செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியில் 61 ரன்களை குவித்து இந்திய அணி 250 ரன்களை கடக்க மிகப்பெரிய உதவியாக இருந்தார். பின்னர் மூன்றாவது போட்டியில் ரோகித் மற்றும் விராட் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்ததால், அவர் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 73 ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், 2917 ரன்கள் அடித்துள்ளார். இதில் 23 அரைசதங்கள் மற்றும் 5 சதங்களும் அடங்கும். 47.82 சராசரியுடன் 99.02 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார். மேலும், அதிகபட்சமாக 128 ரன்களை குவித்துள்ளார்.    

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.