ஒருநாள் கிரிக்கெட்: சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த கில்லெஸ்பி.. ஜாம்பவானுக்கு இடமில்லை

சிட்னி,

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஜேசன் கில்லெஸ்பி தேர்வு செய்துள்ளார்.

முதலாவதாக விராட் கோலியை தேர்வு செய்துள்ள அவர், 2-வது இடத்தில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து ஆச்சரியமளித்துள்ளார். 3-வதாக மகேந்திரசிங் தோனியை தேர்வு செய்துள்ளார். 5-வது வீரராக ஷிகர் தவானை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆனால் அவர் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக கருதப்படும் இந்திய முன்னாள் வீரரான சச்சினை தேர்வு செய்யாமல் அதிர்ச்சி அளித்துள்ளார்.

கில்லெஸ்பி தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த 5 இந்திய ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள்:

1. விராட் கோலி

2. ரோகித் சர்மா

3. மகேந்திரசிங் தோனி

4. வீரேந்திர சேவாக்

5. ஷிகர் தவான்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.