கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்த கையோடு, இந்திய கிரிக்கெட் அணி, நவம்பர் மாதத்தில் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கிரிக்கெட் விருந்தளிக்க காத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் என, அடுத்தடுத்து இரண்டு முக்கிய தொடர்களில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த பரபரப்பான நவம்பர் மாதத்திற்கான இந்திய அணியின் முழுமையான போட்டி அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source

ஆஸ்திரேலியாவுடன் டி20
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த தொடர், இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. முதல் டி20 மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20யில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 3வது டி20 அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. பெல்லரைவ் ஓவல், ஹோபார்ட் மைதானத்தில் 3வது டி20 நடைபெற உள்ளது. இந்த தொடரை வென்று, ஒருநாள் தொடர் தோல்விக்கு பழிதீர்க்க, சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிரமாக போராடி வருகிறது.
நவ. 06 – 4வது டி20 – பில் பிப்பன் ஓவல், கோல்ட் கோஸ்ட்
நவ. 08 – 5வது டி20 – தி கப்பா, பிரிஸ்பேன் – பிற்பகல்
தென்னாப்பிரிக்காவுடன் ஒருநாள் தொடர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் முடிந்த கையோடு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர், இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி, நவம்பர் 30-ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகள், டிசம்பர் மாதத்தில் நடைபெறும். 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயங்களும், புதிய வாய்ப்புகளும்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அவரது இடத்திற், ரியான் பராக், திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்து, அணியில் தங்களின் இடத்தை தக்கவைத்துக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
About the Author
RK Spark