உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் உள்ள மோட்டார்சைக்கிள் பெருமையை பெற்ற புல்லட் அடிப்படையில் புதிய புல்லட் 650 ட்வீன் மாடலை EICMA 2025 அரங்கில் அறிமுகம் செய உள்ளதை ராயல் என்ஃபீல்டு டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. புல்லட் 500 நீக்கப்பட்ட பிறகு தற்பொழுது வரவுள்ள 650சிசி என்ஜின் பெற்ற சக்திவாய்ந்த புல்லட்டில் ஏற்கனவே பிரபலமாக உள்ள பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Royal Enfield Bullet 650 Teased
செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் வசதி, புல்லட் பைக்குகளுக்கு உரித்தான ஸ்டைலிங் நிறங்களுடன் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில் தொடர்ந்து 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் வழக்கமான ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடன் வரக்கூடும்.
விற்பனைக்கு அனேகமாக நடப்பு ஆண்டின் இறுதியில் இந்தியா முழுவதும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நவம்பர் 4ஆம் தேதி EICMA 2025 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்டு விலை ரூ.3 லட்சத்துக்கும் கூடுதலாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் புல்லட்டை தவிர ஹிமாலயன் 750 அல்லது ஹிமாலயன் 450 ரேலி எடிசன் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.