வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் . டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.கேன் வில்லியம்சனின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 விளையாடிவிட்டேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன்.என தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளி இருந்து ஓய்வு அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.