விராட் கோலியின் உணவகத்தில் ஒரு பிரியாணியின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது, தொழில் உலகிலும் ஒரு வெற்றிகரமான ஆட்டக்காரராக வலம் வருகிறார். கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் இவர், One8 Commune என்ற பெயரில் மும்பையில் பிரம்மாண்டமான உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது.

Add Zee News as a Preferred Source

கிஷோர் குமார் பங்களாவில் உருவான உணவகம்

மும்பையின் மிகவும் பிரபலமான மற்றும் முக்கிய பகுதியான ஜூஹூவில், 2022 ஆம் ஆண்டு இந்த உணவகம் தொடங்கப்பட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பழம்பெரும் பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான கௌரி குஞ்ச் என்ற பங்களாவை விராட் கோலி குத்தகைக்கு எடுத்து, அதை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு உணவகமாக மாற்றியுள்ளார். இதன் மூலம், உணவு பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதே கோலியின் நோக்கமாக இருந்துள்ளது.

அசைவம் முதல் சைவம் வரை

இந்த உணவகத்தின் மெனு கார்டு, அனைத்து தரப்பு உணவு பிரியர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசைவ பிரியர்களுக்காக உயர்தர இறைச்சி மற்றும் கடல் உணவுகளும், சைவ உணவு பிரியர்களுக்காக தாவர அடிப்படையிலான உணவுகளும் இங்கு ஏராளமாக உள்ளன. குறிப்பாக, விராட் கோலியின் தனிப்பட்ட உணவு பழக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், Virat’s Favourites என்ற பெயரில் ஒரு பிரத்யேக பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விலை பட்டியல்

இந்த உணவகத்தின் மெனு எவ்வளவு விதவிதமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இங்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணியின் விலை ரூ.976 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, ஒரு சாதாரண சாதத்தின் விலை ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மற்றும் தந்தூரி ரொட்டி ஒன்றின் விலை ரூ.118 ஆகும். இனிப்பு வகைகளில் ஒன்றான மஸ்கார்போன் சீஸ்கேக்கின் விலை ரூ.748. மேலும் இங்கு கிடைக்கும் உயர்தர அசைவ உணவின் விலை ரூ.2,318 வரை செல்கிறது. இந்த விலை பட்டியல், சமூக ஊடகங்களில் பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது. “கோலி சம்பாதிப்பது சரி, அதற்காக இவ்வளவு விலையா?” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செல்லப்பிராணிகளுக்கும் தனி மெனு

மனிதர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வரும் செல்லப்பிராணிகளுக்கும் உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. ரூ.518 முதல் ரூ.818 வரையிலான விலையில், செல்லப்பிராணிகளுக்கான ஆரோக்கியமான உணவுகள் இங்கு கிடைக்கின்றன. இந்த அம்சம் விலங்கு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஒன் 8 கம்யூன் உணவகம் ஒரு ஆடம்பரமான அனுபவத்தை வழங்கினாலும், அதன் விலை சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.