48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை

துனிஸ்: துனிசி​யா​வுக்கு வேலைக்கு சென்ற இந்​திய தொழிலா​ளர்​கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. அவர்​கள் உணவுக்கு வழி​யின்றி தவிப்​ப​தால், மத்​திய அரசு மீட்க வேண்​டும் என கோரிக்கை எழுந்துள்​ளது.

டெல்லி குரு​கி​ராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்​ஸ்ட்​ரக்​ஷன் நிறு​வனம் ஜார்​க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலா​ளர்​கள் 48 பேரை ஆப்​பிரிக்க நாடான துனிசி​யா​வுக்கு வேலைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளது. ஆனால், அவர்​களுக்கு ஒப்​பந்த ஆவணங்​கள் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்​துச் சென்​றவர்​கள் 12 மணி நேரம் வேலை பார்க்​கும்​படி வற்​புறுத்​தி​யுள்​ளனர். மேலும், அவர்​களுக்கு சம்​பள​மும் வழங்​க​வில்​லை.

சம்​பளம் கேட்​டால் நாடு திரும்ப முடி​யாது, சிறைக்கு செல்ல வேண்​டும் என மிரட்​டல் விடுத்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் தொழிலா​ளர்​கள் தற்​போது சாப்​பிடு​வதற்கு கூட பணம் இன்றி தவிக்​கின்​றனர். இவர்​களை மீட்க மத்​திய மற்​றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வீடியோ மூலம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விஷ​யத்​தில் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் தலை​யிட ஜார்​க்கண்ட் எம்​எல்ஏ நாகேந்​திர மகதோ கடிதம் எழு​தி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.