பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்த பின்னர் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அமோகமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்ய துவங்கியுள்ள நிலையில், மாருதி சுசூகி தொடர்ந்து நாட்டின் முதன்மையான நிறுவனமாக விளங்கி வருகின்றது.
ஒட்டுமொத்தமாக 5.49 லட்சம் கார்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.74% வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆனால் மஹிந்திரா, டாடா மற்றும் ஹூண்டாய் இடையே மிக கடுமையான போட்டியை இரண்டாம் இடத்திற்கு மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது.
அக்டோபர் 2025-ல் நாட்டின் முதன்மையான மாருதி 2,38,515 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு அக்டோபரில் விற்ற 2,03,190 யூனிட்களுடன் ஒப்பிடும் போது 17.4% வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக, டாடா மற்றும் மஹிந்திரா என இரு இந்திய நிறுவனமும் மிக வலுவான எலக்ட்ரிக் மற்றும் எஸ்யூவி சந்தை மதிப்பை கொண்டிருக்கின்றது. ஹூண்டாய் அமோகமான சந்தை மதிப்பை பெற்றிருந்தாலும் தொடர்ந்து போட்டியாளர்களை எதிர்கொள்வதில் கடும் சிக்கலை சந்தித்து வருகின்ற நிலையில் அக்டோபரில் 7.3 % வீழ்ச்சி அடைந்துள்ளது.
முழுமையான ஒட்டுமொத்த விற்பனை (Wholesales) அட்டவனையை கீழே வழங்கப்பட்டுள்ளது.
| OEM | October 2025 Sales | October 2024 Sales | % Change |
|---|---|---|---|
| 1. Maruti Suzuki | 238,515 | 203,190 | 17.40% |
| 2. Tata Motors | 73,877 | 65,838 | 12.22% |
| 3. Mahindra | 66,467 | 62,586 | 6.21% |
| 4. Hyundai | 65,045 | 70,171 | -7.30% |
| 5. Toyota | 33,503 | 29,378 | 14.00% |
| 6. Kia | 32,736 | 29,788 | 9.90% |
| 7. Skoda-VW | 12,054 | 8,987 | 34.10% |
| 8. Honda Cars | 7,168 | 7,386 | -3.00% |
| 9. JSW MG | 5,753 | 5,904 | -2.56% |
| 10. Renault | 5,041 | 4,476 | 12.60% |
| 11. Nissan | 2,548 | 2,709 | -5.90% |
| 12. BYD | 560 | 399 | 40.40% |
| 13. Others | 5,816 | 4,998 | 16.40% |
| Total | 549,083 | 495,810 | 10.74% |