காபுல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :