பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது.
இந்த தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

பிஹாரில் மொத்​தம் 243 தொகு​தி​கள் உள்​ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகு​தி​கள், லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் -29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 6 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.

மெகா கூட்​ட​ணி​யில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்​கிரஸ் 61, இந்​திய கம்​யூனிஸ்ட் -எம்​எல் 20, விஐபி 15, இந்​திய கம்​யூனிஸ்ட் 9, மார்க்​சிஸ்ட் 4 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்தி உள்​ளன.

தேர்​தல் வியூக நிபுணர் பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்​ளிட்ட கட்​சிகள் தனித்​தனி​யாக போட்​டி​யிடு​கின்​றன. இந்த சூழலில் பிஹார் தேர்​தல் குறித்து ஜேவிசி நிறு​வனம் கருத்​துக் கணிப்பு நடத்தி முடிவு​களை வெளி​யிட்டு உள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

பிஹார் தேர்​தலில் 122 தொகு​தி​களில் வெற்றி பெறும் கட்சி அறு​திப் பெரும்​பான்​மையை பெற்று ஆட்சி அமைக்​கும். வரும் தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​டணி 120 முதல் 140 தொகு​தி​களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கக்​கூடும்.

இதில் பாஜக 70 முதல் 81 தொகு​தி​களை கைப்​பற்​றும். அந்த கட்சி பிஹார் தேர்​தலில் அதிக இடங்​களை பெறும் கட்​சி​யாக இருக்​கும். ஐக்​கிய ஜனதா தளத்​துக்கு 42 முதல் 48 இடங்​கள் கிடைக்​கும். லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் கட்​சிக்கு 5 முதல் 7, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்​சாவுக்கு 2, ராஷ்டிரிய லோக் மோர்ச்​சாவுக்கு 2 இடங்​கள் கிடைக்​கும்.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 93 முதல் 112 தொகு​தி​கள் வரை கிடைக்​கும். இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 69 முதல் 78 இடங்​கள் வரை வெற்றி பெறக்​கூடும். காங்​கிரஸுக்கு 9 முதல் 17 இடங்​கள் கிடைக்​கலாம். இந்​திய கம்​யூனிஸ்ட் -எம்​எல் கட்​சிக்கு 12 முதல் 14, மார்க்​சிஸ்ட் கட்​சிக்கு 1, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு ஓரிடம் கிடைக்​கும்.

ஜன் சுராஜ் கட்சி ஓரிடத்​தில் வெற்றி பெறக்​கூடும். ஏஐஎம்​ஐஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்​ளிட்ட இதர கட்​சிகள் 8 முதல் 10 இடங்​களை கைப்​பற்​றக்​கூடும். இவ்​வாறு கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.