இந்தியாவில் மாதந்தோறும் 20,000 கூடுதலாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகின்ற நிலையில், நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVitara மூலம் மின் வாகன சந்தையில் டிசம்பர் 2025ல் நுழைகின்றது.
போட்டியாளர்களான டாடா, எம்ஜி, மஹிந்திரா, வின்ஃபாஸ்ட் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள தயாராகியுள்ள மாருதி மிக வலிமையான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் தரம் சார்ந்த மேம்பாடுளை சுசூகி கொண்டிருப்பதனால் வலுவான விற்பனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
தற்பொழுது குஜராத்தில் உள்ள சுசூகி ஆலையில் தயாரிக்கப்பட்ட 7,500 யூனிட்கள் ஏற்கனவே 23 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
eVitara நுட்பவிபரங்கள்
49kWh மற்றும் 61kWh என இருவிதமான பேட்டரி பெற்றுள்ள நிலையில் eVitara 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும். ஆனால் இ விட்டாராவின் ஆல் வீல் டிரைவ் கொண்ட வேரியண்ட் இந்திய சந்தைக்கு மிகவும் தாமதமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4,275மிமீ நீளம், 1,800மிமீ அகலம் மற்றும் 1,640மிமீ உயரம் கொண்டுள்ள இ விட்டாரா காரின் வீல்பேஸ் 2700 மிமீ ஆக உள்ள நிலையில் மிகவும் தாராளமான இடவசதியுடன் இன்டீரியரில் மிதக்கும் வகையிலான 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்சோல் திரை ஆனது 10.1-இன்ச் வழங்கப்பட்டு இரண்டு-ஸ்போக் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல்,வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்ஃபினிட்டி, பை ஹார்மன் ஆடியோ சிஸ்டம், காருக்குள் இணைப்பு தொழில்நுட்பம், ஒற்றை மண்டல தானியங்கி ஏசி, PM 2.5 ஏர் ஃபில்டர் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் முக்கிய வசதிகளாக பார்க்கப்படுகின்றுது.
டிசம்பர் 2025ல் விற்பனைக்கு வரவுள்ள இவிட்டாரா விலை ரூ.16 முதல் ரூ.18 லட்சத்துக்குள் துவங்கலாம்.